“என் புருஷனுக்கு வேறொரு பெண்ணுடன்..” இரு பச்சிளம் குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. ஏரி கரையில் உறைந்துபோன பொதுமக்கள்.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் புருஷனுக்கு வேறொரு பெண்ணுடன்..” இரு பச்சிளம் குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. ஏரி கரையில் உறைந்துபோன பொதுமக்கள்.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கானாபுரம் மண்டலத்தில் உள்ள பக்கல் ஏரியில் தனது இரண்டு பச்சிளம் குழந்தைகளுடன் தாய் ஒருவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கீசுகொண்டா மண்டலம் எல்குர்த்தி ஹவேலி கிராமத்தைச் சேர்ந்த மமதா (30) என்ற பெண், தனது மகள்களான ஹரிணி மற்றும் ஜுன்னுகா ஆகியோருடன் ஏரியில் குதித்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். மமதா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுமன் என்ற நபரைச் சமூக வலைத்தளம் மூலம் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்பொழுது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தனது கணவர் சுமனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் தொடர்பு இருந்ததாகவும், இதனால் தங்களுக்குள் ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே மமதா தனது பச்சிளம் குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வாரங்கல் மாவட்ட துணை காவல் ஆணையர் அங்கித் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். கானாபுரம் காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக நர்சம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்தத் தற்கொலைக்கான முழுமையான பின்னணி குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in