CRIME
“அவள் தற்கொலை செய்துகொண்டதால் பீதியடைந்தேன்..” 2 வருடங்களாகக் கிடைக்காத மனைவியின் உடல்.. நீதிமன்றத்தில் கணவன் சொன்ன பகீர் வாக்குமூலம்..!!
அமெரிக்காவில் தனது மனைவி மம்தா காஃப்லே பட் மர்மமான முறையில் உயிரிழந்த பிறகு, பீதியடைந்து அவரது உடலை ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி வீசியதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரேஷ் பட் அங்குள்ள நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், தனது மனைவி படுக்கையறையில் மாத்திரைகள் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் வாதிடுகிறார். மனைவியின் உடலைக் கண்டதும் பயந்துபோய், சட்ட சிக்கல்களில் இருந்து தப்பிக்கவே அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டிப் பல்வேறு இடங்களில் வீசியதாக நரேஷ் பட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும், மம்தாவின் உடலின் எஞ்சிய பகுதிகள் இதுவரை முழுமையாகக் கண்டறியப்படவில்லை. தற்போது நரேஷ் பட் மீது முதல் நிலை கொலைக் குற்றம்சாட்டப்பட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் கடுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தற்கொலை என்ற நரேஷ் பட்டினுடைய வாதத்தை மறுக்கும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரக் கொலை என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்.
