அடிப்பாவி.. இடையூறாக இருந்த கணவன்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து பயங்கர ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மனைவி… நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடிப்பாவி.. இடையூறாக இருந்த கணவன்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து பயங்கர ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மனைவி… நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில், பவானி என்ற பெண் தனது கள்ளக்காதலன் சந்தோஷுடன் சேர்ந்து, தனது கணவர் சந்துவை மிகக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பூபாலபள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட கொல்லபுத்தாரம் கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பில் இக்கொடூரக் கொலை நிகழ்ந்துள்ளது. கணவன் சந்து தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், பவானியும் அவரது காதலன் சந்தோஷும் இணைந்து இந்த விபரீதத் திட்டத்தைத் தீட்டி சந்துவின் உயிரைப் பறித்துள்ளனர்.

கொலை செய்த பின்னர், குற்றத்தை மறைப்பதற்காகச் சந்துவின் சடலத்தை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி, அருகில் உள்ள சிக்னேபள்ளி கிராமத்திற்கு அருகே கொண்டு சென்று ரகசியமாக வீசியுள்ளனர். சந்து காணாமல் போனது குறித்து எழுந்த சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி பவானி கொலை செய்த கொடூர உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது குற்றவாளியான மனைவி பவானியைக் காவல்துறையினர் கைது செய்து தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள அவரது காதலன் சந்தோஷைத் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in