அய்யோ கொடுமையே.. மொபைல் போன் பறித்த அக்கா.. அடுத்த சில நிமிடங்களில் பிணமாகக் கிடந்த 8 வயது தம்பி.. பெற்றோர் இல்லாத நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கொடுமையே.. மொபைல் போன் பறித்த அக்கா.. அடுத்த சில நிமிடங்களில் பிணமாகக் கிடந்த 8 வயது தம்பி.. பெற்றோர் இல்லாத நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான்மாவட்டத்தின் குடௌண்ட் காவல் எல்லைக்குட்பட்ட துங்கர்புர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ரித்திக் மர்மமான முறையில் உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று சிறுவன் ரித்திக் தனது சகோதரியுடன் சேர்ந்து மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவனது சகோதரி அவரிடமிருந்து போனைப் பிடுங்கியதால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் அவர்களது பெற்றோர் வீட்டில் இல்லை என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தத் தகராறு நடந்த சிறிது நேரத்திலேயே, சிறுவன் ரித்திக் அந்த அறையிலேயே மூச்சற்ற நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், ஜாலான் மாவட்ட காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மொபைல் போன் பழக்கத்தால் இந்த விபரீதம் நேர்ந்துள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மொபைல் போன்களை எவ்வாறு மற்றும் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதில் எப்போதும் விழிப்புடனும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என்று ஜாலான் டிஎஸ்பி அஜய் குமார் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in