அய்யோ கடவுளே..! “வெறும் பார்க்கிங் பிரச்சனைக்கு 15 ரவுண்ட் துப்பாக்கிச்சூடா..?” தீபாவளி கொண்டாடுவதற்கு சொந்த ஊர் திரும்பிய அதிகாரிக்கு நேர்ந்த கொடூர முடிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கடவுளே..! “வெறும் பார்க்கிங் பிரச்சனைக்கு 15 ரவுண்ட் துப்பாக்கிச்சூடா..?” தீபாவளி கொண்டாடுவதற்கு சொந்த ஊர் திரும்பிய அதிகாரிக்கு நேர்ந்த கொடூர முடிவு..!!

Published

on

அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பார்க்கிங் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிங்கப்பூர் நிறுவனத்தின் உயர் அதிகாரியும், முன்னாள் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பிராந்திய வணிகத் தலைவருமான பரம்பீத் தன்கர் அவரது பக்கத்து வீட்டு நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தீபாவளிப் பண்டிகை மற்றும் குடும்பத் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சொந்த ஊருக்குத் திரும்பியபோது இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிங்கப்பூரை தளமாக கொண்டு இயங்கும் கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்த பரம்பீத் தன்கர், தனது குடும்பத்தினரின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த நவம்பர் 5 ஆம் தேதி இந்தியா வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துவிட்டு ஃபரிதாபாத் செக்டார் 21சி பகுதியில் உள்ள தனது இல்லத்திற்கு அவர் திரும்பியுள்ளார். அப்போது அவரது நான்கு மாடி கட்டடத்திற்கு வெளியே உள்ள, தனது குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடத்தில் பக்கத்து வீட்டுக்காரர் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுள்ளார்.

வாகனத்தை அகற்றுமாறு மோகன் சர்மாவிடம் அவர் கேட்டுக்கொண்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மோகன் சர்மா தனது உரிமம் பெற்ற கைப்பாக்கியை எடுத்து பரம்பீத் தன்கரை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளார். ஆரம்பகட்ட காவல்துறை அறிக்கைகளின்படி, சுமார் பதினைந்து ரவுண்டுகள் சுடப்பட்டதில் பல குண்டுகள் பரம்பீத் தன்கரின் உடலில் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே கட்டடத்தில் வசித்து வந்த பரம்பீத் தன்கர் குடும்பத்திற்கும் மோகன் சர்மா குடும்பத்திற்கும் இடையில் நீண்ட காலமாகவே பல்வேறு பிரச்சனைகள் காரணமாக சிறு சிறு மோதல்கள் இருந்து வந்துள்ளன. குறிப்பாக பார்க்கிங் இடங்களை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறுகளும், மோகன் சர்மாவின் மகன் தங்களது பார்க்கிங் பகுதியில் நாயை மலஜலம் கழிக்கச் செய்வதாக பரம்பீத் குடும்பத்தினர் எழுப்பிய எதிர்ப்புகளுமே இந்தத் மோதல்களுக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது.

Advertisement

சம்பவத்திற்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்புகூட இது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஐந்து நாட்களுக்கு முன்பு வாய்மொழியாக ஒருவரையொருவர் திட்டித் தீர்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் மகன் சௌரியா உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மோகன் சர்மா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைப் பிடிக்கக் தனிப்படை காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in