திடீர் அந்தர் பல்டி.! துணை சபாநாயகர் தாக்கியதாக மருத்துவமனையில் வீடியோ வெளியிட்ட நபர்.. அடுத்த சில மணி நேரத்தில் அவரிடமே அமர்ந்து விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீர் அந்தர் பல்டி.! துணை சபாநாயகர் தாக்கியதாக மருத்துவமனையில் வீடியோ வெளியிட்ட நபர்.. அடுத்த சில மணி நேரத்தில் அவரிடமே அமர்ந்து விளக்கம்..!!

Published

on

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகருமான த.வெ.க ரவிசங்கர் தன்னைத் தாக்கியதாகவும், தனது மரணத்திற்கு அவரே காரணம் என்றும் கார்த்திக் என்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி வீடியோ ஒன்றை நேற்று இரவு வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று காலையில் அந்த நபர் த.வெ.க ரவிசங்கர் அருகிலேயே அமர்ந்து நேரடி விளக்கம் அளித்துள்ளார்.

இன்று காலை வெளியிட்ட புதிய வீடியோவில் பேசிய கார்த்திக், நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு மற்றும் சிறு காயம் மட்டுமே ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பதற்றத்திலும் ஆத்திரத்திலும் தான் அவசரமாக மருத்துவமனைக்குச் சென்று அவ்வாறு தவறான வீடியோவை வெளியிட்டுவிட்டதாகவும், த.வெ.க ரவிசங்கர் தன்னைத் தாக்கவில்லை என்றும் அவர் தனது முந்தைய குற்றச்சாட்டை மறுத்துக் கூறினார்.

Advertisement

நேற்றிரவு துணை சபாநாயகருக்கு எதிராக மரண வாக்குமூலம் போல வீடியோ வெளியிட்ட நபர், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதே ரவிசங்கரின் அருகிலேயே அமர்ந்து கொண்டு, “கூட்ட நெரிசலை வைத்துச் சிலர் தவறாகப் பரப்புகிறார்கள்” எனப் அந்தர் பல்டி அடித்து விளக்கம் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் தற்பொழுது பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in