CRIME
“செத்துப்போனதா மனிதநேயம்..?” நடுரோட்டில் வலிப்பால் துடித்த 42 வயது நபர்… வேடிக்கை பார்த்த மக்கள்.. இறுதியில் நேர்ந்த சோகம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் ஜோகுலாம்பா கத்வால் மாவட்டத்தில், 42 வயதான ஆடம் என்ற நபர் சாலையில் திடீரென கடுமையான வலிப்பு ஏற்பட்டு துடிதுடித்துள்ளார். அவர் சாலையில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோதும், அங்கிருந்த உள்ளூர் மக்களோ அல்லது கடந்து சென்ற பாதசாரிகளோ அவருக்கு உதவ முன்வராமல் முற்றிலும் புறக்கணித்துள்ளனர். ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் தாலுபுலா மண்டலத்தைச் சேர்ந்த இவர், நீண்ட நேரம் சாலையிலேயே உதவி கிடைக்காமல் அவதியுற்றுள்ளார்.
பின்னர், தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு கத்வால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மகபூப்நகர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மகபூப்நகர் கொண்டு செல்லும் வழியிலேயே ஆடம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் இருந்தவருக்குச் சரியான நேரத்தில் மக்கள் உதவ முன்வராத இந்த மனிதநேயமற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
