“எனக்கு ஐபோன் தான் வேணும்..” மாமியாரின் தங்க நகைகளை அள்ளிக்கொண்டு ஓடிய மருமகள்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கு ஐபோன் தான் வேணும்..” மாமியாரின் தங்க நகைகளை அள்ளிக்கொண்டு ஓடிய மருமகள்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தனக்கு ஐபோன் வாங்க வேண்டும் என்ற மோகத்திற்காக, மாமியாரின் 53 கிராம் தங்க நகைகளைத் திருடி விற்ற மருமகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாக்பூரின் சாந்திநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ள இந்த விசித்திரமான திருட்டுச் சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாமியார் ராதா வர்மா என்பவர் ஷீரடிக்கு ஆன்மீகப் பயணம் செல்லத் திட்டமிட்டிருந்தார். அப்போது அணிந்து செல்வதற்காகத் தனது அலமாரி லாக்கரைத் திறந்து பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகமடைந்த அவர், தனது மருமகள் கிராந்தாலி ஆகாஷ் வர்மாவிடம் விசாரித்தபோது, அவர்தான் நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.

Advertisement

நகைகளை விற்றுத் தனக்கு ஆசையாக இருந்த ஆப்பிள் ஐபோனை வாங்கிவிட்டதாக மருமகள் வாக்குமூலம் அளித்துள்ளார். நகைகளைத் திருப்பித் தருவதாகப் பலமுறை கூறியும் தராமல் ஏமாற்றியதால், மாமியார் கொடுத்த புகாரின் பேரில் சாந்திநகர் போலீசார் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், திருடப்பட்ட 53 கிராம் நகைகள் எங்கு விற்கப்பட்டன, மொபைல் போன் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in