“என் புருஷனுக்கு ஹார்ட் அட்டாக்..” பிணத்தின் முன் அழுது நாடகமாடிய கள்ளக்காதலி… பெங்களூரு கணவன் கொ** வழக்கில் பகீர் திருப்பம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் புருஷனுக்கு ஹார்ட் அட்டாக்..” பிணத்தின் முன் அழுது நாடகமாடிய கள்ளக்காதலி… பெங்களூரு கணவன் கொ** வழக்கில் பகீர் திருப்பம்..!!

Published

on

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை நள்ளிரவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்துவிட்டு, அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவியின் கொடூரச் செயல் பிரேதப் பரிசோதனை அறிக்கையால் அம்பலமாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தப்பியோட முயன்ற மனைவி அனிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் மதுசூதன் ஆகிய இருவரையும் எலக்ட்ரானிக் சிட்டி போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு டொட்டதோகூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது உபேந்திரா என்பவர் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி நள்ளிரவில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கணவர் இறந்தவுடன் அவரது மனைவி அனிதா, அவர் கால்தவறி கீழே விழுந்துவிட்டதாகவும், அதன் பின்னரே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்றும் உறவினர்களிடம் கூறி அழுது நாடகமாடியுள்ளார். உபேந்திராவின் மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்குப்பதிவு செய்த போலீஸார், உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.

Advertisement

சமீபத்தில் வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், உபேந்திரா மாரடைப்பால் இறக்கவில்லை என்பதும், அவரது மூச்சுக்குழாய் நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்பதும் உறுதியானது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், சம்பவத்தன்று இரவு அந்த வீட்டிற்கு வந்து சென்ற மர்ம நபரைக் கண்காணித்து கள்ளக்காதலன் மதுசூதனைக் கைது செய்து விசாரித்தபோது கொலையின் பின்னணி வெளிவந்தது. அனிதாவிற்கும் மதுசூதனுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், அதை உபேந்திரா கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.

சம்பவத்தன்று இரவு கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் ஆத்திரமடைந்த அனிதா, தனது கள்ளக்காதலன் மதுசூதனைத் தொலைபேசி மூலம் வீட்டிற்கு அழைத்துள்ளார். நள்ளிரவில் உபேந்திரா படுக்கையறையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, மதுசூதன் அவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளார். அப்போது அனிதா கணவனின் வாய் மற்றும் மூக்கைப் பொத்தி உதவ, மதுசூதன் அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தற்போது கொலையாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு, போலீஸார் மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in