CRIME
“மாயமான புருஷன்” புள்ளைய மீட்க பச்சிளம் குழந்தை பலி..! தீபாவளி நள்ளிரவில் அண்டை வீட்டு தொட்டில் குழந்தையை திருடிய தாய்-மகள்.. நடந்தது என்ன..? பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், தீபாவளிப் பண்டிகை நன்னாளில் தனது கணவன் மற்றும் மகனைத் திரும்பப் பெறுவதற்காக, அண்டை வீட்டுக்காரரின் இரண்டு மாதப் பச்சிளம் குழந்தையைப் பலி கொடுக்க முயன்ற பெண்ணின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சரஸ்வதி மற்றும் அவரது மகள் சாவித்திரி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சரஸ்வதியின் கணவன் மற்றும் மகன் சில காலத்திற்கு முன்பு திடீரென மாயமாகியுள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தத் தகவலும் கிடைக்காததால், நேபாளத்தில் உள்ள ஒரு மாந்தீரிகரைச் (Tantric) சரஸ்வதி சந்தித்துள்ளார். உங்களது கணவனும் மகனும் பத்திரமாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீண்டும் வர வேண்டும் என்றால் தீபாவளி அமாவாசை அன்று ஒரு குழந்தையைப் பலி கொடுக்க வேண்டும் என்றும் அந்த மாந்தீரிகர் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட சரஸ்வதி, தனது அண்டை வீட்டுக்காரரான கோவிந்த் ராஜ்பர் என்பவரின் இரண்டு மாத ஆண் குழந்தையைப் பலி கொடுக்கத் திட்டமிட்டார். இதற்காகத் தனது மகள் சாவித்திரியையும் வரவழைத்துத் திட்டத்தை விவரித்துள்ளார். கடந்த 2026 நவம்பர் 3-ஆம் தேதி தீபாவளி நள்ளிரவில், கோவிந்தும் அவரது மனைவி கஞ்சனும் குழந்தையுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, சாவித்திரி சத்தமில்லாமல் படுக்கையறைக்குள் நுழைந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு தப்பியுள்ளார்.
அதிகாலை 4 மணியளவில் கஞ்சன் எழுந்து பார்த்தபோது படுக்கையில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேடியபோது, சரஸ்வதியின் வீட்டில் குழந்தை மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மூடநம்பிக்கையால் அண்டை வீட்டுக் குழந்தையையே பலி கொடுக்கத் துணிந்த தாய், மகள் இருவரையும் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
