CRIME
“அறைக்குள் நடந்தது என்ன..?” வெளியே காத்திருந்த சகோதரி… திடீரென பையுடன் ஓடிய காதலன்..! ஃபேஸ்புக் காதலனை நம்பிப்போன திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. புலந்தஷகரைச் சேர்ந்த பிந்து மற்றும் திருமணமான பிங்கி இருவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி, கடந்த ஐந்து மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். பிந்து தனது காதலியைச் சந்திப்பதற்காக நண்பரின் உதவியுடன் அப்பகுதியில் ஒரு அறை வாடகைக்கு எடுத்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் பிங்கி தனது சகோதரியுடன் பிந்துவைச் சந்திப்பதற்காக அந்த அறைக்கு வந்துள்ளார். பிங்கியும் பிந்தும் அறைக்குள் இருக்க, அவரது சகோதரி வெளியே காத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பிந்து தனது பையை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றபோது, அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சகோதரி கூச்சலிட்டுள்ளார்.
உடனே அருகில் இருந்த அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பிண்டு மற்றும் அவரது நண்பர் ஆர்யன் இருவரும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர். இருப்பினும், அதற்குள் பிந்து கொடூரமான முறையில் செங்கல்லால் தாக்கி பிங்கியைப் படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
