“கொஞ்சம் சத்தத்தைக் குறைங்க…” பக்கத்து வீட்டில் சத்தமாக ஓடிய டிவி… தட்டிக் கேட்ட நோயாளியை அடித்துக் கொ**ற அண்டை வீட்டுக்காரர்..! பதறவைக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“கொஞ்சம் சத்தத்தைக் குறைங்க…” பக்கத்து வீட்டில் சத்தமாக ஓடிய டிவி… தட்டிக் கேட்ட நோயாளியை அடித்துக் கொ**ற அண்டை வீட்டுக்காரர்..! பதறவைக்கும் கொடூரம்..!!

Published

on

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் டிவியின் சத்தத்தை குறைப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறில், பக்கத்து வீட்டுக்காரர் தாக்கியதால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்தூர் சென்ட்ரல் கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை, உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. குற்றத்தைச் செய்த பக்கத்து வீட்டுக்காரர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, உயிரிழந்தவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சந்தீப் வர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். திங்கள்கிழமை இரவு பக்கத்து வீட்டில் வசிக்கும் அணில் வர்மா என்பவரின் வீட்டில் டிவி மிக உரத்த சத்தத்தில் இயங்கியுள்ளது. இதனால் வீட்டில் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கும், உடலநலம் குன்றியிருந்த சந்தீப் வர்மாவிற்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக சந்தீப் வர்மா பக்கத்து வீட்டுக்காரரான அணில் வர்மாவிடம் எதிர்ப்பை தெரிவித்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியுள்ளது. அப்போது அணில் வர்மா தள்ளியதில், சந்தீப் வர்மாவின் தலை சுவரில் பலமாக மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அணில் வர்மா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள இந்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in