“இன்னைக்கு ஒருநாள் குடிக்காதீங்க…” என்று சொன்ன மனைவியை தடியால் அடித்துக் கொன்ற கணவன்… தீபாவளி நாளில் நேர்ந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இன்னைக்கு ஒருநாள் குடிக்காதீங்க…” என்று சொன்ன மனைவியை தடியால் அடித்துக் கொன்ற கணவன்… தீபாவளி நாளில் நேர்ந்த கொடூரம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், தீபாவளி பண்டிகை அன்று மது அருந்தக் கூடாது என்று தடுத்த மனைவியை, கணவன் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜபல்பூர் சர்கவான் காவல் எல்லைக்குட்பட்ட பேட்கி கிராமத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இக்கொலை சம்பவத்தில் உயிரிழந்த பெண் சோகர்தி பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தீபாவளி பண்டிகை இரவன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் தனது கணவனை மது குடிக்க வேண்டாம் என்று தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றவே, கணவன் வீட்டில் இருந்த தடியை எடுத்து மனைவியை ஓங்கி ஓங்கி கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபர் வழக்கமாகவே தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தும் வழக்கம் கொண்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவலறிந்து வந்த சர்கவான் காவல் ஆய்வாளர் சரோஜினி சவ்காசே தலைமையிலான போலீசார், தடய அறிவியல் குழுவினருடன் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து உடலைக் கைப்பற்றினர். அங்கு உடைந்த வளையல்களும் ரத்தக் கறைகளும் காணப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in