LATEST NEWS
“காசு ஒன்னு… பெனிபிட் ரெண்டு…!” ஏர்டெல்லின் ‘Buy One Get One’ ஆஃபர்… உடனே யூஸ் பண்ணுங்க மக்களே…!!
டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ (Buy One Get One Free) என்ற மிகவும் கவர்ச்சிகரமான புதிய ஆஃபரை அறிவித்துள்ளது. இச்சலுகையின் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், அதே கால அளவுக்கு மற்றொரு ரீசார்ஜை எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாகப் பெற முடியும்.
இந்த அதிரடிச் சலுகையானது ஏர்டெல்லின் ₹349 மற்றும் ₹399 ஆகிய இரண்டு குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டுமே தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களை வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் உள்ள ‘ஏர்டெல் தேங்க்ஸ்’ செயலி மூலமாக ரீசார்ஜ் செய்யும்போது மட்டுமே இந்தச் சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும், இச்சலுகை அனைத்து பயனர்களுக்கும் இன்றி, தகுதியுள்ள குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்கள் இந்த ஆஃபரின் கீழ் 28 நாள்கள் செல்லுபடியாகும் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது, அவர்களுக்கு மேலும் 28 நாள்களுக்கு கூடுதல் வேலிடிட்டி இலவசமாகக் கிடைக்கிறது. இதன் மூலம், ஒரே ரீசார்ஜ் கட்டணத்தில் பயனர்கள் மொத்தம் 56 நாள்களுக்குத் தடையற்ற அழைப்புகள் மற்றும் தரவு (Data) சேவைகளை எக்ஸ்ட்ரா கட்டணம் ஏதுமின்றிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
