இன்னொரு பெண்ணா..? உலகின் டாப் டெக் நிறுவனத்தில் பகீர் சர்ச்சை… பெண் அதிகாரியுடன் நெருக்கம் – பதவி பறிபோகும் நிலையில் Nvidia CEO..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இன்னொரு பெண்ணா..? உலகின் டாப் டெக் நிறுவனத்தில் பகீர் சர்ச்சை… பெண் அதிகாரியுடன் நெருக்கம் – பதவி பறிபோகும் நிலையில் Nvidia CEO..!!

Published

on

உலகின் முன்னணி ஏ.ஐ (AI) சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் , அந்நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவுத் துணைத் தலைவரான கிம்பர்லி பவல் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. தனக்குக் கீழ் பணிபுரியும் உயர் அதிகாரியுடன் அவர் உறவு வைத்திருந்தது நிறுவனத்தின் நடத்தை விதிகளை மீறும் செயல் எனக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் கலிபோர்னியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றின் போது இருவரும் நெருக்கமாக இருந்த காட்சிகள் வீடியோவில் பதிவானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, சீன உளவாளியாகச் செயல்பட்டதாக அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் (Alice Huang) என்ற தொழிலதிபருடன் தொடர்பு வைத்திருந்ததை ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் என்விடியா நிறுவனத்தின் சுயாதீனக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு சர்ச்சைகளும் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, என்விடியா நிறுவனத்தின் பங்கு விலையிலும் சரிவை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

இந்தத் தொடர் சர்ச்சைகள் மற்றும் நிறுவன விதிமீறல்கள் காரணமாக, ஜென்சன் ஹுவாங்கை சிஇஓ பதவியிலிருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க என்விடியாவின் இயக்குநர்கள் குழு அவசர ஆலோசனை நடத்தி வருவதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ தெரிவித்துள்ளது. சுமார் 33 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்தி வந்த அவரைப் பதவியிலிருந்து நீக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலால், அந்நிறுவனத்தின் அடுத்தகட்ட தலைமை குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in