LATEST NEWS
போடு ரகிட ரகிட..! “சொந்த வீடு கனவு நனவாகிறது” இவர்களுக்கு மட்டும் சிறப்பு வட்டித் தள்ளுபடி.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் மற்றும் மனைகளைப் பெற்ற ஒதுக்கீட்டாளர்களுக்குச் சிறப்பு வட்டித் தள்ளுபடி வழங்குவதற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வட்டித் தொகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிம்மதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் வாயிலாகத் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் மற்றும் பயனாளிகள் நேரடியாகப் பயனடையவுள்ளனர். குறிப்பாக, 6,496-க்கும் மேற்பட்ட நபர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என அதிகாரப்பூர்வ தகவலեր தெரிவிக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாகச் செலுத்த முடியாமல் தேங்கி நின்ற வட்டித் தொகைக் சுமையிலிருந்து விடுபடுவதோடு, தங்களது சொத்துகளுக்கான முழு உரிமத்தையும் (Sale Deed) எளிதாகப் பெற்றுக்கொள்ள இந்தச் சிறப்புத் தள்ளுபடி நடவடிக்கை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
