“என்னை எப்படியாவது இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வாருங்கள்…” ஏஜெண்டின் பகீர் மோசடி.. சவுதியில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் உருக்கமான வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை எப்படியாவது இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வாருங்கள்…” ஏஜெண்டின் பகீர் மோசடி.. சவுதியில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் உருக்கமான வீடியோ..!!

Published

on

அல்மாஸ் என்ற இந்தியப் பெண்ணை முகவர் ஒருவர் நிர்வாகப் பணி வாங்கித் தருவதாகக் கூறி சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அல்மாஸ் தெரிவித்த தகவலின்படி, அங்கு சென்ற பிறகு அவருக்கு வாக்குறுதியளித்தபடி நிர்வாகப் பணி வழங்கப்படாமல், அதற்குப் பதிலாக வீட்டு வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார். இதனால் கடும் மன உளைச்சலுக்கும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ள அவர், உடனடியாகத் தாயகம் திரும்ப வேண்டும் என விரும்புகிறார்.

தன்னைப் பாதுகாப்பாக இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வருமாறு அல்மாஸ் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் தலைவர் வாரிஸ் பதான் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவலில், பிரதமர் அலுவலகம் வெளியுறவுத் துறை அமைச்சகம் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in