பதைபதைக்கும் CCTV காட்சி.. ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பயணி.. எமன் கையிலிருந்து உயிரை காப்பாற்றிய RPF வீரர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பதைபதைக்கும் CCTV காட்சி.. ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பயணி.. எமன் கையிலிருந்து உயிரை காப்பாற்றிய RPF வீரர்..!!

Published

on

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி ஒருவரை, ரயில்வே பாதுகாப்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சிரியால் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரையா (53) என்பவர், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடைமேடையிலிருந்து நகரத் தொடங்கிய கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவசர அவசரமாக ஏற முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் வழுக்கியதால், நடைமேடைக்கும் ஓடும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் அவர் தவறி விழுந்தார்.

இதைக் கவனித்த பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவர், சற்றும் தாமதிக்காமல் ஓடிச் சென்று தண்டவாளத்திற்குள் இழுக்கப்படவிருந்த சந்திரையாவைத் தனது சாமர்த்தியத்தால் இழுத்துப் பாதுகாப்பாக நடைமேடைக்குக் கொண்டு வந்தார். காவலரின் இந்த மின்னல் வேக நடவடிக்கையால் 53 வயதுப் பயணி பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பினார். இந்தப் பதைபதைக்க வைக்கும் மீட்புக் காட்சிகள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in