LATEST NEWS
“உங்களால் எதுவுமே பண்ண முடியாது” ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்.. திருமா கொடுத்த ‘நச்’ ரிப்ளை.. அதிமுகவினருக்கு விசிக தலைவர் பதிலடி..!!
தவெக ஆட்சி விரைவில் கவிழும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூறி வரும் கருத்துகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி கவிழும் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது என்பது எதிர்க்கட்சிகள் வழக்கமாகச் செய்யும் ஒரு அரசியல் உத்தி மட்டுமே என திருமாவளவன் குறிப்பிட்டார். அப்படியே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அது ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், தற்போதைய ஆட்சி கவிழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
மேலும், தாங்கள் ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளைத் தயங்காமல் சுட்டிக்காட்டி வருவதாகவும் திருமாவளவன் கூறினார். கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பதோடு, மக்களின் குரலாகவும் தங்களது கட்சி தொடர்ந்து செயல்படும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
