“அடர்ந்த காட்டுக்குள் மாயமான 15 வயதுச் சிறுவன்.. ” 7 நாட்களுக்குப் பிறகு நீர்வீழ்ச்சி அருகே நிகழ்ந்த மிராக்கிள்.. கண்கலங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடர்ந்த காட்டுக்குள் மாயமான 15 வயதுச் சிறுவன்.. ” 7 நாட்களுக்குப் பிறகு நீர்வீழ்ச்சி அருகே நிகழ்ந்த மிராக்கிள்.. கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

இந்தோனேசியாவில் மலையேற்றத்தின்போது தனது குழுவிலிருந்து பிரிந்து அடர்ந்த காட்டுக்குள் மாயமான 15 வயதுச் சிறுவன் அஸ்ராடிங், முழுதாக 7 நாட்கள் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் வழிதவறிச் சென்ற சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவனது உடைகள், தொப்பி மற்றும் பை ஆகியவை மட்டுமே காட்டில் கண்டெடுக்கப்பட்டன. இதனால் சிறுவன் உயிருடன் இருப்பானா என்ற நம்பிக்கை மெல்ல மங்கத் தொடங்கியது. இருப்பினும், மீட்புக் குழுவினரும் உள்ளூர் கிராமவாசிகளும் தங்கள் தேடுதல் வேட்டையைக் கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஏழாவது நாளில் தேடுதல் குழுவில் ஈடுபட்டிருந்த கிராமவாசிகள், வனப்பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு அருகே சிறுவன் அஸ்ராடிங்கை உயிருடன் கண்டெடுத்தனர். நீல நிறப் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில், உடல் மிகவும் சோர்வடைந்தும் சிறு காயங்களுடனும் காணப்பட்ட அந்தச் சிறுவனை மீட்புக் குழுவினர் உடனடியாகப் பாதுகாப்பாக மீட்டு மருத்துவ உதவிக்கு அழைத்துச் சென்றனர். ஏழு நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி அடர்ந்த காட்டுக்குள் உயிர் பிழைத்திருந்த 15 வயதுச் சிறுவனின் மனவலிமையும், அவனைக் கைவிடாமல் தேடிக் கண்டுபிடித்த கிராமவாசிகளின் முயற்சியும் தற்போது உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in