திக் திக் திக் .. நண்பர்களுடன் அருவியில் மகிழ்ச்சியாக குளித்த பெண்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

திக் திக் திக் .. நண்பர்களுடன் அருவியில் மகிழ்ச்சியாக குளித்த பெண்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

இந்தோனேசியாவைச் சேர்ந்த வெண்டி ரஹ்மா (25) என்ற இளம்பெண், கடந்த நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருந்த ஒரு நீர்வீழ்ச்சியில் விளையாடிக் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நழுவி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து மதியம் 3:45 மணியளவில் நடந்த போதிலும், மீட்புக் குழுவினருக்கு இதுகுறித்த தகவல் 1 மணி நேரம் 42 நிமிடங்களுக்குப் பிறகே கிடைத்துள்ளது. இந்தத் தாமதத்திற்குப் பிறகும், சுமார் 119 பேர் அடங்கிய மீட்புக் குழுவினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, இன்று காலை அந்த இளம்பெண்ணைச் துரதிர்ஷ்டவசமாகச் சடலமாக மீட்டனர்.

தண்ணீரின் வேகத்தையும் ஆபத்தையும் உணராமல், அதிகப்படியான சுயநம்பிக்கையுடன் ஆபத்தான நீர்நிலைகளில் இறங்குவது எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சோகச் சம்பவம் ஒரு சான்றாகும். பொழுதுபோக்கிற்காகச் செல்லும் இடங்களில் ஆபத்துகளைக் குறைத்து மதிப்பிடுவது, ஒருவரின் மகிழ்ச்சியான தருணத்தை அவரது வாழ்க்கையின் இறுதித் தருணமாக மாற்றிவிடும் என்பதை இந்தத் துயர நிகழ்வு உணர்த்துகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in