LATEST NEWS
“சுத்தம் செய்ய ரயில் பெட்டிக்குள் ஏறிய ஊழியர்கள்..” உள்ளே கிடந்ததைப் பார்த்து அலறியடித்து ஓட்டம்… 7 நாட்களாக நின்ற ரயில் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம்..! விலகாத மர்மம்..!!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலைய யார்டில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள், 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும் அந்த ரயில் பெட்டிக்குள், நவம்பர் 18-ஆம் தேதி காலை வழக்கம்போல் துப்புரவுப் பணியாளர்கள் சென்றபோது அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக நாகர்கோவில் இருப்புப்பாதை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலம் மிகவும் அழுகிய நிலையில் காணப்படுவதால், அப்பெண் உயிரிழந்து சுமார் 5 முதல் 7 நாட்கள் ஆகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் கணித்துள்ளனர். உயிரிழந்த பெண் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? எப்போது ரயில் பெட்டிக்குள் வந்தார்? மற்றும் இது கொலையா அல்லது தற்கொலையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
