“அடச்சீ.. ரீல்ஸ் மோகத்தால் இப்படியா..?” சொந்த குழந்தையின் உயிரைப் பணயம் வைத்த பெற்றோரின் பகீர் செயல்.. இணையத்தில் வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ.. ரீல்ஸ் மோகத்தால் இப்படியா..?” சொந்த குழந்தையின் உயிரைப் பணயம் வைத்த பெற்றோரின் பகீர் செயல்.. இணையத்தில் வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுப் புகழ்பெற வேண்டும் என்ற மோகத்தில், சில பெற்றோர்கள் தங்களது நாகரிகத்தையும் அடிப்படை அறிவையும் இழந்து செயல்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் சில வீடியோக்களுக்காகவும், இணையத்தில் கிடைக்கும் லைக்குகளுக்காகவும் தங்களது சொந்தக் குழந்தைகளை உயிருடன் தண்ணீரில் தூக்கி வீசும் அளவிற்கு இவர்களது செயல் கீழ்த்தரமாக மாறியுள்ளது.

தங்களது சுய ஒழுக்கத்தையும் தார்மீகப் பொறுப்புகளையும் காற்றில் பறக்கவிட்டு, பெற்ற குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்து வீடியோ எடுக்கும் இத்தகைய நபர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தங்களது சொந்தக் குழந்தைகளுக்கே இத்தகைய ஆபத்தான கொடுமையைச் செய்யத் துணிந்தவர்கள், வீடியோ எடுப்பதற்காக மற்றவர்களுக்கு எந்த எல்லைக்கும் சென்று எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதையே இது காட்டுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in