“அடப்பாவமே.. ஒரு பிடி கோதுமைத் தவிட்டுக்காக இப்படியா..?” சொந்த மாமாவையே கொடூரமாக தீர்த்துக்கட்டிய மருமகன்.. பகீர் பின்னணி.!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவமே.. ஒரு பிடி கோதுமைத் தவிட்டுக்காக இப்படியா..?” சொந்த மாமாவையே கொடூரமாக தீர்த்துக்கட்டிய மருமகன்.. பகீர் பின்னணி.!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பழைய பஸ்தியில் உள்ள சோன்ஹாட்டி பகுதியில், கோதுமைத் தவிடு வீசியது தொடர்பான சிறிய தகராறில் மருமகன் தன் மாமாவைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் கூரையின் மீது காயவைப்பதற்காகப் பரப்பப்பட்டிருந்த கோதுமைத் தவிட்டை வீசியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிறிய தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில், இரு தரப்பிலிருந்தும் சுமார் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

இந்த மோதலின் போது, சோன்ஹாட்டியைச் சேர்ந்த 50 வயதான லலன் என்ற முதியவர் கடுமையாகத் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சொந்த மருமகனே மாமாவைத் தாக்கிக் கொலை செய்த இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுவரை மூன்று பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in