“ஐயோ என் புள்ளைய காப்பாத்துங்க”தந்தையின் கண்முன்னே நடந்த கொடூரம்… எருமை மாடு சண்டையில் மாடு மிதித்து 8 வயது சிறுவன் துடிதுடித்து பலி..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ என் புள்ளைய காப்பாத்துங்க”தந்தையின் கண்முன்னே நடந்த கொடூரம்… எருமை மாடு சண்டையில் மாடு மிதித்து 8 வயது சிறுவன் துடிதுடித்து பலி..!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், தீபாவளிப் பண்டிகையையொட்டி நடைபெற்ற எருமை மாடுகள் சண்டையில் கட்டுப்பாட்டை இழந்த மாடு மிதித்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான். நாக்சிரி காவல் நிலையத்திற்குட்பட்ட ஹாமுகேடி பகுதியில், தனது தந்தை ஆகாஷ் தய்மாவுடன் போட்டியைக் காணச் சென்ற 3-ம் வகுப்பு மாணவன் யுவராஜ், கூட்டத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு எருமை மாடுகள் திடீரெனக் கூட்டத்திற்குள் புகுந்ததில், ஒரு மாடு சிறுவன் யுவராஜின் மார்பின் மீது ஏறி மிதித்தது. தந்தையின் கண்முன்னே நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

தடை செய்யப்பட்ட இத்தகைய ஆபத்தான மாட்டுச் சண்டைகள் அப்பகுதியில் தொடர்ந்து நடத்தப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நாக்சிரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in