“அந்த ₹60 ஆயிரம் கோடிய இப்போ வாங்கிக்கொடுங்க” நான் ஏன் பயப்படணும்..? பினாமி விமர்சனங்களுக்கு துரைமுருகன் சம்பந்தி கண்ணன் ரவி விட்ட அதிரடி ஓபன் சேலஞ்ச்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த ₹60 ஆயிரம் கோடிய இப்போ வாங்கிக்கொடுங்க” நான் ஏன் பயப்படணும்..? பினாமி விமர்சனங்களுக்கு துரைமுருகன் சம்பந்தி கண்ணன் ரவி விட்ட அதிரடி ஓபன் சேலஞ்ச்..!!

Published

on

தன்னை திமுகவின் பினாமி என்றும், தன்னிடம் ₹60 ஆயிரம் கோடி பணம் இருப்பதாகவும் கூறி வருபவர்களுக்குத் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சம்பந்தியுமான கண்ணன் ரவி பகிரங்கச் சவால் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘டெலிவரி பாய்’ திரைப்பட விழாவில் பேசிய அவர், தன் மீதான விமர்சனங்களுக்குக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தனது மகன் திருமணத்தின் பிரம்மாண்ட செலவுகளைத் தொடர்ந்து, கண்ணன் ரவி திமுகவின் பினாமி எனச் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதிலளித்த அவர், “யாரைப் பார்த்தாலும் பினாமி, பினாமி என்று சொல்வதா? என்னுடைய பணத்தை நான் செலவு செய்ய நான் ஏன் பயப்பட வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

Advertisement

மேலும், தன்னிடம் ₹60 ஆயிரம் கோடி பணம் இருப்பதாகக் கூறுபவர்கள் முடிந்தால் அந்தப் பணத்தை இப்போதே வாங்கிக் கொடுக்குமாறும் அவர் சவால் விடுத்துள்ளார். அவ்வாறு பணம் கிடைத்தால், அதை மக்களுக்காகவும் கிராமங்களின் வளர்ச்சிக்காகவும் செலவிடத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துபாயில் சொந்தமாகப் பல நிறுவனங்களை நடத்தி உழைத்துச் சம்பாதித்த பணத்தையே தான் செலவு செய்வதாகத் தெரிவித்துள்ள கண்ணன் ரவி, தான் யாருக்கும் பினாமி என்பதை நிரூபித்தால் ₹5 கோடி பரிசு வழங்குவதாகவும் ஏற்கனவே சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in