LATEST NEWS
ஆளே இல்லாமல்..! நள்ளிரவில் தானாகவே 868 முறை பார்க்கிங் செய்த எலக்ட்ரிக் கார்… காலை எழுந்து பார்த்த உரிமையாளருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… வைரல் வீடியோ..!!
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில், நள்ளிரவு நேரத்தில் ஓட்டுநர் இல்லாத எலக்ட்ரிக் கார் ஒன்று தானாகவே நகர்ந்து மீண்டும் மீண்டும் பார்க்கிங் செய்ய முயன்ற விசித்திரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு வளாகத்தின் அடித்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த எலக்ட்ரிக் கார், நள்ளிரவு நேரத்தில் யாரும் உள்ளே இல்லாத நிலையிலேயே திடீரென உயிர்பெற்று இயங்கத் தொடங்கியுள்ளது. பார்க்கிங் இடத்திற்குள் முன்னும் பின்னுமாக நகர்ந்து, தானாகவே சரியான இடத்தில் காரை நிறுத்த அந்த வாகனம் விடாப்பிடியாக முயற்சி செய்துகொண்டே இருந்துள்ளது.
மறுநாள் காலையில் தனது காரின் செயல்பாட்டுப் பதிவுகளை உரிமையாளர் சரிபார்த்தபோது, இரவு முழுவதும் அந்தக் காரின் தானியங்கி பார்க்கிங் வசதி சுமார் 868 முறை தொடர்ந்து செயல்பட்டிருந்தது தெரியவந்து அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு அல்லது சென்சார் பிழையால் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், இது குறித்த வீடியோ மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
