“கனவுப் பயணத்தில் விபரீதம்” நேபாள மலையேற்றத்தில் கேரள வ்ளாகர் உயிரிழப்பு… நடந்தது என்ன? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கனவுப் பயணத்தில் விபரீதம்” நேபாள மலையேற்றத்தில் கேரள வ்ளாகர் உயிரிழப்பு… நடந்தது என்ன?

Published

on

கேரளாவின் கண்ணூர் மாவட்டம், தலைச்சேரி எரணோளியைச் சேர்ந்த 31 வயது பயண வ்ளாகர் அஞ்சுநாத் காவிங்கல் வளப்பில் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப் நோக்கிய மலையேற்றத்தின்போது உயிரிழந்தார். எவரெஸ்ட் பேஸ் கேம்புக்கு முந்தைய இறுதித் தங்குமிடமான கோரக்ஷெப் (சுமார் 5,164 மீட்டர் உயரத்தில்) பகுதியில் உள்ள ஓட்டல் அறையில் வியாழக்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அதிக உயரமான பகுதிகளுக்கு வேகமாகச் செல்லும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் அக்யூட் மவுண்டன் சிக்னஸ்காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நேபாளத்தின் அன்னபூர்ணா பேஸ் கேம்ப் மலையேற்றத்தை வெற்றிகரமாக முடித்திருந்த அவர், இம்முறை எவரெஸ்ட் பேஸ் கேம்பை இலக்காகக் கொண்டு சென்றிருந்தார்.

Advertisement

அவரது உடல் ஹெலிகாப்டர் மூலம் காத்மண்டுவுக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்த பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in