“துரோகத்தின் உச்சம்.. கழிவறையில் சிதறிக்கிடந்த ரத்தம்.. படிக்கட்டில் கிடந்த சிசு..” முதலிரவு முடிந்து விடிந்ததும் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மாப்பிள்ளை வீட்டாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“துரோகத்தின் உச்சம்.. கழிவறையில் சிதறிக்கிடந்த ரத்தம்.. படிக்கட்டில் கிடந்த சிசு..” முதலிரவு முடிந்து விடிந்ததும் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மாப்பிள்ளை வீட்டாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Published

on

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே, திருமணமான மறுநாளே புதுமணப் பெண்ணுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு வீட்டின் படிக்கட்டுப் பகுதியில் சிசு இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை தாலுகா அரியகுளம் லைன் தெருவைச் சேர்ந்த கொத்தனார் வெங்கடேஷ் (25) என்பவருக்கும், தாழையூத்து அருகேயுள்ள ஏரான்குடிபாலத்தைச் சேர்ந்த பிச்சம்மாளுக்கும் கடந்த ஜூன் 29-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 13-ஆம் தேதி சாந்தி நகர் பிள்ளையார் கோயிலில் சடங்குகள் முடிந்து, சீவலப்பேரி ரோடு திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த அன்றிரவே புதுமணத் தம்பதியினர் அரியகுளத்தில் உள்ள வெங்கடேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், திருமணமான மறுநாள் அதிகாலை பிச்சம்மாளுக்குத் திடீரெனக் கடுமையான வயிற்று வலியும் அதிக அளவில் இரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. வீட்டின் கழிவறையில் இரத்தம் சிதறி இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த வெங்கடேஷின் அக்காள், பிச்சம்மாளிடம் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது தனக்கு வயிற்று வலிப்பதாக பிச்சம்மாள் கூறியதைத் தொடர்ந்து, பதறிப்போன வெங்கடேஷும் அவரது அக்காளும் பிச்சம்மாளை உடனடியாகப் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர்.

Advertisement

இதற்கிடையே, வெங்கடேஷின் வீட்டுப் படிக்கட்டுப் பகுதியில் சிசு ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கே சிசு இறந்து கிடப்பதைக் கண்டு திகைத்துப் போனார். இதன் மூலம், தனது மனைவி பிச்சம்மாள் திருமணத்திற்கு முன்பே சுமார் 5 மாத கர்ப்பமாக இருந்ததைத் தன்னிடமும் குடும்பத்தினரிடமும் மறைத்து, ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாக வெங்கடேஷ் சந்தேகமடைந்தார்.

இந்த உண்மையை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் திருமணத்திற்குச் சம்மதித்திருக்க மாட்டேன் எனக் கூறிய வெங்கடேஷ், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி மற்றும் கருச்சிதைவு ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்திப் புதுமணப் பெண் பிச்சம்மாளைக் கைது செய்துள்ளனர். திருமணமான மறுநாளே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in