நொடியில் நடந்த கோரம்..கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் பாய்ந்த கார்.. நேருக்கு நேர் மோதிப் பல அடி உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்ட பைக் இளைஞர்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

நொடியில் நடந்த கோரம்..கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் பாய்ந்த கார்.. நேருக்கு நேர் மோதிப் பல அடி உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்ட பைக் இளைஞர்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் கன்டேபள்ளி மண்டலம் நீலாத்ரி ராவ்பேட்டை பகுதியில் நடந்த கோர சாலை விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறத்திற்கு பாய்ந்தது. இதனால் எதிர்த்திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது அந்த கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

கார்கள் மோதிய அதே நொடியில், பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான காரின் மீது மோதினார். மோதிய வேகத்தில் அந்த இளைஞர் பல அடி உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்டுச் சாலையில் விழுந்தார். இந்தக் கோர விபத்தில் கார் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேரை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்தப் பயங்கர விபத்துக் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in