CRIME
“மீனாட்சிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..” தனிஷ்க் கொள்ளை வழக்கில் நிஷாந்த் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்..!!
தனிஷ்க் கொள்ளை வழக்கு தொடர்பாக நிஷாந்த் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது. தன்னால் தனது தந்தைக்கு ஏற்பட்ட ரூ.30 லட்சம் கடனை அடைப்பதற்கும், தோழியான மீனாட்சிக்கு வீடு கட்டுவதற்கும் அவருக்குப் பணத் தேவை இருந்துள்ளது.
பணத் தேவையைப் பூர்த்தி செய்ய, அவர் முதலில் நோட்டமிட்டுள்ளார். வாடிக்கையாளர் போல நடித்து நகை காட்சிப்பெட்டியின் (ஷோகேஸ்) பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஊழியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகே, இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
தோழி மீனாட்சிக்கு வீடு கட்டப் பணத் தேவை இருந்ததாகக் குறிப்பிட்டாலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கும் மீனாட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிஷாந்த் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
