“சினிமா பாணி கடத்தல.., போலீசாரைக் கண்டதும் காரை விட்டு ஓடிய கும்பல்.. ரகசிய அறையைத் திறந்தபோது போலீசாருக்கே காத்திருந்த பேரதிர்ச்சி.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“சினிமா பாணி கடத்தல.., போலீசாரைக் கண்டதும் காரை விட்டு ஓடிய கும்பல்.. ரகசிய அறையைத் திறந்தபோது போலீசாருக்கே காத்திருந்த பேரதிர்ச்சி.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

கர்நாடகாவில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டிற்கு அருகே பாக்கு வியாபாரியின் காரைக் கடத்திச் சென்ற மர்ம கும்பல், போலீசாரைக் கண்டதும் காரை நடுரோட்டில் விட்டுவிட்டுத் தப்பியோடிய நிலையில், அந்தக் காரின் ரகசிய அறையிலிருந்து ரூ.1.14 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திலிருந்து கேரள மாநிலம் வயநாட்டிற்கு பாக்கு வியாபாரி அப்துல் கபீர் (37) மற்றும் ஓட்டுநர் முகமது செரீப் (39) ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். பந்தலூர் அருகே இவர்களது காரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து, பணத்துடன் காரைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்துக் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கடத்தப்பட்ட கார் வருவதைக் கண்டு அதனைத் துரத்திச் சென்றனர். போலீசாரைக் கண்டதும் பதறிப்போன அந்த மர்ம கும்பல், காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

Advertisement

மீட்கப்பட்ட காரைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து போலீசார் முழுமையாகச் சோதனையிட்டபோது, காரின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில் கட்டுக்கட்டாகப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடியே 14 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய கும்பல் மற்றும் இந்த ஹவாலா பணத்தின் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in