“இப்படியும் ஒரு திருமணப் பரிசா..?” இரு மாப்பிள்ளைகளுக்கு ரூ.2 கோடி பண மாலை அணிவித்து அசத்திய மைத்துனர்.. வாயடைத்துப் போன உறவினர்கள்.. இணையத்தைக் கலக்கும் வேற லெவல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்படியும் ஒரு திருமணப் பரிசா..?” இரு மாப்பிள்ளைகளுக்கு ரூ.2 கோடி பண மாலை அணிவித்து அசத்திய மைத்துனர்.. வாயடைத்துப் போன உறவினர்கள்.. இணையத்தைக் கலக்கும் வேற லெவல் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், இரு மணமகன்களுக்கும் தலா ரூ.1 கோடி என மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பண மாலைகள் பரிசாக வழங்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா போண்டா கிராமத்தில் இந்தப் பிரம்மாண்ட திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பாக நடைபெற்ற பாரம்பரிய குதிரை ஊர்வலத்தின்போது, மணமகன்களின் உறவினரான யோகேஷ் குமார் என்பவர் இந்த வியக்கத்தக்கப் பரிசை வழங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ரூ.500 நோட்டுகளால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தப் பண மாலைகள் ஒவ்வொன்றும் சுமார் 100 அடி நீளம் கொண்டவையாக இருந்தன. தலா ரூ.1 கோடி மதிப்புள்ள இந்த இரண்டு பிரம்மாண்ட மாலைகளையும் இரு மணமகன்களின் கழுத்திலும் அணிவித்தபோது அங்கிருந்தவர்கள் உற்சாகமடைந்தனர். மாலைகள் மிகவும் நீளமாகவும் அதிக எடையுடனும் இருந்ததால், அவற்றைத் தரையில் படாமல் தூக்கிப் பிடிப்பதற்குப் பல உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து உதவினர்.

Advertisement

ஒரே திருமண விழாவில் ரூ.2 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டு மாலைகள் அணிவிக்கப்பட்ட இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் பிரம்மாண்ட பரிசு வழங்கும் தருணம் மற்றும் ஊர்வலக் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது ஆச்சரியத்தையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in