கடவுள் கொடுத்த தண்டனை.. ரேஷன் அட்டைக்காக இளம் விதவையை 3 ஆண்டுகள் சீரழித்த 13 அதிகாரிகளுக்கு கொடூர கதி.. பரிசோதனையில் காத்திருந்த மரண பீதி.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

கடவுள் கொடுத்த தண்டனை.. ரேஷன் அட்டைக்காக இளம் விதவையை 3 ஆண்டுகள் சீரழித்த 13 அதிகாரிகளுக்கு கொடூர கதி.. பரிசோதனையில் காத்திருந்த மரண பீதி.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பதத் பகுதியில், ரேஷன் அட்டை மற்றும் விதவை உதவித்தொகைக்காக ஆதரவற்ற இளம்பெண் ஒருவரை 13 பேர் சேர்ந்து 3 ஆண்டுகளாகச் சீரழித்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 24 வயதில் திருமணமான அந்தப் பெண்ணின் கணவர் மும்பையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், திருமணமான மூன்றே ஆண்டுகளில் அவர் உயிரிழந்தார். குழந்தைகள் இல்லாத நிலையில், கணவரையும் இழந்து ஆதரவின்றித் தவித்த 27 வயது இளம் விதவை, தனது வாழ்வாதாரத்திற்காக ரேஷன் அட்டை மற்றும் விதவை உதவித்தொகை பெறுவதற்காகக் கிராம வேலைவாய்ப்பு உதவியாளரை அணுகியுள்ளார்.

அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிய அந்த உதவியாளர், அந்தப் பெண்ணைக் கிராமத் தலைவரிடமும், கிராமத் தலைவர் செயலாளரிடமும் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால், உதவி செய்ய வேண்டிய அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் அனைவரும் அந்தப் பெண்ணின் ஏழ்மையைப் பயன்படுத்தி, பணத்திற்குப் பதிலாகத் தங்களது பாலியல் இச்சைக்கு இணங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். வேறு வழியின்றித் தவித்த அந்தப் பெண்ணை, கிராமத் தலைவர், செயலாளர் மற்றும் இடைத்தரகர்கள் என மொத்தம் 13 பேர் சேர்ந்து சுமார் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

Advertisement

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், அவர் தன்னைத் தொந்தரவு செய்தவர்களிடம் இணங்க மறுத்துள்ளார். முதலில் அவரை நாட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்ற நிலையில், உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்று ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தத் தகவல் வெளியானதும், கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பெண்ணைச் சீரழித்து வந்த 13 அதிகாரிகளும் இடைத்தரகர்களும் பெரும் பீதியடைந்து வியர்த்து விறுவிறுத்துப் போயினர். அச்சத்தில் அவர்கள் ஒவ்வொருவராகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டதில், அந்த 13 பேருக்கும் எச்.ஐ.வி தொற்று பரவியிருப்பது உறுதியானது. ஒரு கிலோ ரேஷன் அரிசிக்கும், விதவை உதவித்தொகைக்கும் ஆசைப்பட்டு ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த 13 பேருக்கும் இயற்கையே தக்க பாடம் புகட்டியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in