அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா ஸ்டாலின்..? கொளத்தூர் தொகுதி குறித்து துரைமுருகன் கொடுத்த டுவிஸ்ட் பதில்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா ஸ்டாலின்..? கொளத்தூர் தொகுதி குறித்து துரைமுருகன் கொடுத்த டுவிஸ்ட் பதில்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே இறுதி முடிவெடுப்பார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம், வரவிருக்கும் தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அவர்தான் கட்சியின் தலைவர்; எனவே கொளத்தூரில் போட்டியிடுவது குறித்து அவர்தான் முடிவெடுப்பார். இந்தக் கேள்வியை நீங்கள் ஸ்டாலினிடமே கேளுங்கள்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

Advertisement

தொடர்ந்து, தற்போது திமுக கட்சியை உதயநிதி ஸ்டாலின் முழுமையாக வழிநடத்தி வருவதாகவும், இதன் காரணமாக மு.க.ஸ்டாலின் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குச் சற்று காட்டமாகப் பதிலளித்த துரைமுருகன், இதுபோன்று அடிப்படை ஆதாரமற்ற, தனக்குத் தெரியாத தகவல்களுக்கெல்லாம் தன்னால் பதிலளிக்க முடியாது என்றும், அதுகுறித்துப் பேசத் தனக்கு விருப்பமில்லை என்றும் கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in