“கள்ளக்காதலர்கள் உடலில் மிளகாய்ப்பொடி தூவி, தண்ணீர் ஊற்றிய நரிக்குறவர்கள்..” பெங்களூருவில் சிக்கிய காதல் ஜோடிக்குப் பல்லாவரத்தில் விழுந்த தர்ம அடி.. போலீஸ் தீவிர விசாரணை..!! – cinefeeds
Connect with us

CRIME

“கள்ளக்காதலர்கள் உடலில் மிளகாய்ப்பொடி தூவி, தண்ணீர் ஊற்றிய நரிக்குறவர்கள்..” பெங்களூருவில் சிக்கிய காதல் ஜோடிக்குப் பல்லாவரத்தில் விழுந்த தர்ம அடி.. போலீஸ் தீவிர விசாரணை..!!

Published

on

சென்னை பல்லாவரத்தில் திருமணமான பெண்ணுடன் ஊரை விட்டுச் சென்றதாகக் கூறப்படும் இளைஞரை, நரிக்குறவர் சமூகத்தினர் பஞ்சாயத்து கூட்டி சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பவானி என்ற பெண்ணுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான திருமணமான வாலிபர் டேவிட் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்த நிலையில், தேடுதல் நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதாகக் கருதிய நரிக்குறவர் சமூகத்தினர் தாங்களாகவே இருவரையும் தேடத் தொடங்கியுள்ளனர். மேலும், டேவிட்டைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என வாட்ஸ்அப் குழுக்களில் தகவல் பகிர்ந்ததன் மூலம், இருவரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பெங்களூரு சென்ற அவர்கள், டேவிட் மற்றும் பவானியைப் பிடித்து பல்லாவரம் நரிக்குறவர் காலனிக்கு அழைத்து வந்துள்ளனர்.

Advertisement

அங்கு பஞ்சாயத்து கூட்டிய சமூகத்தினர், திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் ஏன் தலையிட்டாய் எனக் கூறி டேவிட்டைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். குறிப்பாக, அவர் மீது மிளகாய்ப்பொடி தூவியும், தண்ணீர் ஊற்றியும் கொடூரமாகத் தாக்கியதோடு, பவானியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்த அவர்கள், அதனைப் பூந்தமல்லியில் உள்ள டேவிட்டின் உறவினர்களுக்கு அனுப்பி, அவர்களையும் பஞ்சாயத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தாக்குதலுக்கு உள்ளாகிப் படுகாயமடைந்த டேவிட்டை மீட்டு தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சட்டத்தைக் கையில் எடுத்துப் பஞ்சாயத்து கூட்டி இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in