“குடும்பமும் நம்பவில்லை, நீயும் நம்பவில்லை…” மதுபோதையில் காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“குடும்பமும் நம்பவில்லை, நீயும் நம்பவில்லை…” மதுபோதையில் காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

பெங்களூருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆண் நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, ஜன்னல் வழியாகத் தவறி விழுந்து 23 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 19-ஆம் தேதி கங்கம்மகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதி ஒன்றில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் காதலரான தனியார் நிறுவன ஊழியர் சந்தோஷ் என்பவரைப் போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த ஐஸ்வர்யாவின் தாய் அளித்த புகாரின்படி, ஐஸ்வர்யாவும் சந்தோஷும் காதலித்து வந்துள்ளனர். முன்னதாக, ஐஸ்வர்யா தனது தோழி அருந்ததியின் காதலரது நண்பரான சச்சின் என்பவருடன் ‘ஓயோ’ அறைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அருந்ததி ஐஸ்வர்யாவின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் குடும்பத்தினர் ஐஸ்வர்யாவைத் திட்டியதோடு, காதலன் சந்தோஷும் தன்னை நம்பாமல் சந்தேகப்பட்டதால் ஐஸ்வர்யா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில், நவம்பர் 19-ஆம் தேதி ஐஸ்வர்யாவும் சந்தோஷும் ஒரு தங்கும் விடுதிக்குச் சென்றுள்ளனர். அன்று மாலை இருவரும் மது அருந்திய நிலையில், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது குடும்பத்தினரும் சரி, காதலன் சந்தோஷும் சரி தன்னை நம்பவில்லை எனக் கூறி ஐஸ்வர்யா வேதனைப்பட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக ஐஸ்வர்யா கூறியுள்ளார்.


அதற்குப் பதிலளித்த சந்தோஷ், “நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்” என்று ஆத்திரத்துடன் கூறி ஐஸ்வர்யாவைக் கையால் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய ஐஸ்வர்யா, விடுதியின் ஜன்னல் வழியாகக் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிவு செய்த கங்கம்மகுடி போலீசார், சந்தோஷைக் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in