LATEST NEWS
அம்மாடியோ.. சாய்ந்த ஹைட்ரா இயந்திரம்… உயர் அழுத்த மின் கம்பியைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிசயம்.. பதற வைக்கும் திக் திக் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் கத்ரி மோர் பகுதியில், உயர் அழுத்த மின் கம்பிகளில் படர்ந்திருந்த கொடிகளை அகற்றும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். மின் கம்பிகளில் இருந்த கொடிகளை அகற்றுவதற்காக ‘ஹைட்ரா’ இயந்திரத்தின் உதவியுடன் அந்த இளைஞர் அதிக உயரத்திற்குத் தூக்கப்பட்டார்.
பணி நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த ஹைட்ரா இயந்திரம் தனது சமநிலையை இழந்து ஒரு பக்கமாகச் சாயத் தொடங்கியது. இதனால், மேலே இருந்த இளைஞர் உயர் அழுத்த மின் கம்பியைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டது. இந்தத் திக் திக் சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியும் பதற்றமும் ஏற்பட்ட நிலையில், நல்வாய்ப்பாகப் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவம் மின்சாரத் துறை மற்றும் ஒப்பந்ததாரரின் கடுமையான அலட்சியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. எவ்வித அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்றி ஆபத்தான உயர் அழுத்த மின் கம்பிகளில் பணியாற்ற அனுமதித்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இளைஞரின் உயிரைப் பணயம் வைக்கும் வகையில் நடந்த இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டிற்கு யார் பொறுப்பு எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
