LATEST NEWS
“எனக்கு தைரியம் கொடுத்த நாட்டுக்கு என் மரியாதை..” தேசியக் கொடி நிறத்தில் புடவை கட்டி 10 கி.மீ ஓடி அசத்திய இந்தியப் பெண்.. வைரலாகும் வீடியோ..!!
துபாயின் மிகவும் பிரபலமான சாலையான ஷேக் சையத் ரோட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் கேரளாவைச் சேர்ந்த கஞ்சனா நாயர் என்ற இந்தியப் பெண், சிவப்பு நிறப் புடவை, பச்சை ரவிக்கை மற்றும் தலையில் வெள்ளை கஜரா அணிந்து கொண்டு ஓடுகிறார். முதலில் மக்கள் வியப்படைந்தாலும், அவர் புடவை கட்டிக்கொண்டே முழுமையாக 10 கிலோமீட்டர் தூரம் ஓடி முடித்ததை அறிந்ததும் அனைவரும் அவரைப் பாராட்டினர். கடந்த 14 ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் கஞ்சனா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜ்மானில் சொந்தமாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கினார்; பல வருடங்களாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர், அரை மாரத்தானிலும் பங்கேற்று இதுவரை ஐந்து முறை துபாய் ரன் போட்டியில் ஓடியுள்ளார்.
இம்முறை அவர் புடவையில் சைக்கிள் ஓட்டியும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றும் இரட்டை சாதனை படைத்துள்ளார். நவம்பர் 1-ஆம் தேதி கேரளப் பிறவி தினத்தையொட்டி ‘துபாய் ரைடு’ நிகழ்வில் கேரளப் புடவை அணிந்து சைக்கிள் ஓட்டினார்; 2000-ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு சைக்கிள் ஓட்டாத இவர், நிகழ்வுக்கு முந்தைய நாள் இரவுதான் இளஞ்சிவப்பு நிறச் சைக்கிள் வாங்கி, கட்டடத்திற்குள் சிறிது பயிற்சி செய்து மறுநாள் ஷேக் சையத் ரோட்டில் ஓட்டியுள்ளார், அந்த வீடியோ 4.3 லட்சத்திற்கும் மேல் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 22-ஆம் தேதி நடைபெற்ற ‘துபாய் ரன் 2026’ போட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் 55-வது தேசிய நாளுக்கு முன்பாக அந்த நாட்டிற்கு மதிப்பளிக்கும் விதமாகவும், தனக்கு வாய்ப்புகளையும் தைரியத்தையும் கொடுத்த இரண்டாவது வீடாகக் கருதும் அமீரகக் கொடியின் நிறத்தோடு ஒத்துப்போகும் சிவப்புப் புடவையையும் அவர் தேர்வு செய்தார்.
https://www.instagram.com/reel/DfPbFwEIUXr/?utm_source=ig_web_button_share_sheet
3.1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்தப் போட்டியில், எளிதான 5 கிலோமீட்டர் பாதைக்குப் பதிலாகக் கடினமான 10 கிலோமீட்டர் தூரத்தைத் தேர்ந்தெடுத்துக் கஞ்சனா ஓடி முடித்த வீடியோ 5 லட்சத்திற்கும் மேலான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. வழியில் மக்கள் நின்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, சமூக வலைதளங்களிலும் பலர் ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். புடவையிலும் இவ்வளவு உடற்தகுதியுடன் இருக்க முடியுமா என்றும், இதுதான் உண்மையான இந்தியப் பெண்ணின் சிறப்பு என்றும், புடவையைக் கடினமானதாகக் கருதுபவர்களுக்கு உலகின் எந்தச் சாலையிலும் அதில் ஓட முடியும் என்பதைக் கஞ்சனா நிரூபித்துள்ளார் என்றும் பயனர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
