“சர்வே கல்லைக் காட்டி தீபத்தூண் என அடம்பிடிப்பதா..?” பி.எல். சந்தோஷை விளாசிய மாணிக்கம் தாகூர்.. திருப்பரங்குன்றம் சர்ச்சையில் வெடித்த புதிய மோதல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சர்வே கல்லைக் காட்டி தீபத்தூண் என அடம்பிடிப்பதா..?” பி.எல். சந்தோஷை விளாசிய மாணிக்கம் தாகூர்.. திருப்பரங்குன்றம் சர்ச்சையில் வெடித்த புதிய மோதல்..!!

Published

on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில், 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டி பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஐ.டி விங் தொண்டர்களைப் போலக் கையில் கிடைப்பதையெல்லாம் ஆராயாமல் எடுத்துப் பதிவிடுவது ஒரு தேசியப் பொதுச்செயலாளருக்கு அழகா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாயக்கர் காலத்துக் கல்வெட்டு மற்றும் அனுமன் சிற்பம் பொறிக்கப்பட்ட உண்மையான தீபத்தூணில்தான் ஆகம விதிகளின்படி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், எந்தவித வரலாற்று ஆதாரமோ, கல்வெட்டோ அல்லது அனுமன் சிற்பமோ இல்லாத, ஆங்கிலேயர் காலத்தில் நில அளவைக்காக நடப்பட்ட வெறும் ‘சர்வே கல்லை’க் காட்டி, “இதோ இதுதான் தீபத்தூண், இதில் ஏற்றுங்கள்” என்று பி.எல். சந்தோஷும் அவரது கூட்டத்தினரும் அடம்பிடிப்பது எவ்வளவு பெரிய அறியாமை என்றும் அவர் சாடியுள்ளார்.

Advertisement

திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் கூடச் சென்று பார்க்காமல், உண்மை நிலையை அறியாமல் மக்களிடையே குழப்பத்தையும் மத ரீதியான பிளவையும் ஏற்படுத்தப் பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றையும் திருப்பரங்குன்றம் மலையின் உண்மை நிலையையும் முதலில் புரிந்துகொண்டு கருத்துத் தெரிவிக்குமாறு அவர் பி.எல். சந்தோஷுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in