“ரத்தத்திற்கு ரத்தம், உயிருக்கு உயிர்..!” ஊருக்குள் புகுந்து நாய்க்குட்டியைக் கொன்ற கொடூர சிறுத்தை… அடுத்த சில மணி நேரத்தில் தாய் நாய் செய்த பகீர் காரியம்.. கிராம மக்களை வியப்பில் ஆழ்த்திய திகில் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரத்தத்திற்கு ரத்தம், உயிருக்கு உயிர்..!” ஊருக்குள் புகுந்து நாய்க்குட்டியைக் கொன்ற கொடூர சிறுத்தை… அடுத்த சில மணி நேரத்தில் தாய் நாய் செய்த பகீர் காரியம்.. கிராம மக்களை வியப்பில் ஆழ்த்திய திகில் சம்பவம்..!!

Published

on

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள தவ்லாவட்கான் கிராமத்தில், ஊருக்குள் புகுந்த ஒரு வயது மதிக்கத்தக்க சிறுத்தைக் குட்டி ஒன்று அங்கிருந்த நாய்க்குட்டியைத் தாக்கிக் கொன்றுள்ளது. தனது கண்முன்னே குட்டி கொல்லப்பட்டதைக் கண்டு ஆக்ரோஷமடைந்த தாய் நாய், அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தச் சிறுத்தையைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது. தாய் நாயின் இந்த ஆவேசமான தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுத்தைக் குட்டி, அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தது.

“ரத்தத்திற்கு ரத்தம், உயிருக்கு உயிர்” என்பது போல, தனது குட்டியைக் கொன்ற சிறுத்தையைத் தாய் நாய் பழிவாங்கிவிட்டதாகக் கிராம மக்கள் வியப்புடன் தெரிவித்து வருகின்றனர். ஒரு சாதாரண நாய், வேட்டையாடும் திறன் கொண்ட சிறுத்தையை வீழ்த்திய செய்தி அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயாகப் பரவி, கிராம மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், உயிரிழந்த சிறுத்தைக் குட்டி மற்றும் நாய்க்குட்டியின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது உண்மையிலேயே தாய் நாயின் பழிவாங்கும் தாக்குதலால் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் சிறுத்தை உயிரிழந்ததா என்ற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in