LATEST NEWS
“நம்ம வீட்டு பெண்களுக்கு யாராவது இப்படி மெஸேஜ் அனுப்பினா சும்மா இருப்போமா..?” குற்றவாளிக்கு தீபாவளி பரிசு கொடுக்காரு CM.. ஆளுநர் சந்திப்புக்குப் பின் உதயநிதி வெடித்த சரவெடி..!!
தமிழக ஆளுநரை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், “நம்ம வீட்டில் உள்ள பெண்களுக்கு யாராவது ஒருவர் இப்படி மெஸேஜ் அனுப்பினால் நாம் சும்மா இருப்போமா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், குற்றவாளிகளை அழைத்து முதலமைச்சர் கடுமையாகக் கண்டிப்பார் என்று எதிர்பார்த்தால், அவர்களுக்குத் தீபாவளி பரிசு கொடுப்பதாகவும் உதயநிதி கடுமையாகச் சாடியுள்ளார்.
காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டால், காவல்துறையினர் ஜோசியர் பேச்சைக் கேட்டுக்கொண்டு காவல் நிலையத்திற்குள்ளேயே யாகம் நடத்துவதாகக் குற்றம்சாட்டினார். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை இவ்வாறு மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது இது தொடர்பாகத் தாங்கள் முதலமைச்சரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு முதலமைச்சர் தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு தொடர்பான முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் முதலமைச்சர் மௌனம் காப்பதாக உதயநிதி ஸ்டாலின் தனது செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டியுள்ளார்.
