LATEST NEWS
BREAKING: ராஜினாமா செய்கிறார் MLA அருள் விக்னேஷ்..? சற்றுமுன் பரபரப்பு தகவல்..!!
கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கியுள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இதில் நீதிபதிகள் பிறப்பிக்கவுள்ள உத்தரவின் அடிப்படையில், அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருள் விக்னேஷின் வீட்டில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
