LATEST NEWS
குஷியோ குஷி..! மகளிர் உரிமைத்தொகை புதிய விண்ணப்ப பதிவு… பெண்களுக்கு வெளியான குட் நியூஸ்..!!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை இணையாத தகுதியுள்ள பெண்களுக்கான புதிய விண்ணப்பப் பதிவு, தமிழகத்தில் காலியாக உள்ள 2 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிந்த பிறகு தொடங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையமும் (ECI) வரும் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு, அதாவது ஜனவரி மாதத்திற்குப் பின் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு ₹2,500 வழங்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
