“இது மக்களுக்கான நீதியா..? இல்லை அதிகார ஆதிக்கமா..?” திருப்பரங்குன்றம் தீர்ப்பால் திருமாவளவன் ஆவேசம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது மக்களுக்கான நீதியா..? இல்லை அதிகார ஆதிக்கமா..?” திருப்பரங்குன்றம் தீர்ப்பால் திருமாவளவன் ஆவேசம்..!!

Published

on

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை எனத் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன் என்றும், உச்சநீதிமன்றம் இதனை தனது ‘ஈகோ’ பிரச்சினையாகக் கருதுகிறதா என்றும், சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்சநீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா என்றும் அவர் வினவியுள்ளார்.

Advertisement

மேலும், நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பல தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சபரிமலையில் பெண்கள் பங்கேற்பது குறித்த தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டுவது ஏன் என்றும் கேட்டுள்ளார். கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றும் மரபைத் தகர்த்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவதும், திருப்பரங்குன்றம் மலையை சிஆர்பிஎஃப் துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் ஒப்படைப்பதும் மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் என்றும், இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in