“ஆம்புலன்ஸில் பிணங்களைக் கடத்தி காட்டுக்குள்” வரதட்சணைப் புகார் கொடுத்த மனைவிகளைப் பழிதீர்த்த கணவர்கள்.. மொத்தக் குடும்பமும் சிக்கியது.. நடந்தது என்ன..? – cinefeeds
Connect with us

CRIME

“ஆம்புலன்ஸில் பிணங்களைக் கடத்தி காட்டுக்குள்” வரதட்சணைப் புகார் கொடுத்த மனைவிகளைப் பழிதீர்த்த கணவர்கள்.. மொத்தக் குடும்பமும் சிக்கியது.. நடந்தது என்ன..?

Published

on

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஷம்சேரா பகுதியில், சகோதரர்களான சிவ் சங்கர் சாஹு மற்றும் நவீன் சாஹு ஆகியோர் தங்கள் மனைவிகளான மினி பிரியா (28) மற்றும் ராதிகா குமாரி (20) ஆகியோரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தில் மருமகள்களாக இருந்த இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சண்டைகள் இருந்து வந்ததாகவும், ஆனால் கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அவை சமரசமாக முடிவுக்கு வந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தாக்குதல் மற்றும் வரதட்சணைக் கொடுமை தொடர்பாகப் பெண்கள் அளித்த புகாரும் பின்னர் சமரசத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 23ஆம் தேதி நடந்த இக்கொலைக்குப் பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநரான சிவ் சங்கர் சாஹு அந்த ஆம்புலன்ஸிலேயே இரு உடல்களையும் ஏற்றிச் சென்று, அண்டை மாவட்டமான சிம்டேகாவின் ஆள்நடமாட்டம் குறைவான வனப்பகுதியில் புதைத்துள்ளார். போலீசாரை திசைதிருப்ப மனைவிகள் காணாமல் போய்விட்டதாகக் கணவர்கள் புகார் அளித்து நாடகமாடியுள்ளனர்.

Advertisement

விசாரணையில் அவர்களது வாக்குமூலங்களில் முரண்பாடு ஏற்பட்டதால் சந்தேகம் வலுத்து, இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து வனப்பகுதியிலிருந்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன; கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கோடாரி மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, கணவர்களுடன் அவர்களது பெற்றோர்களான சமேஷ்வர் சாஹு மற்றும் திலேஷ்வரி தேவி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in