LATEST NEWS
FLASH: திருப்பரங்குன்றம் தீபமேற்றும் நேரம் இதுதான்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்குக் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கோயில் பொறுப்பாளர் முன்னாள் நீதிபதி வி. பார்த்திபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோயில் பட்டர்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு அவர் இந்த முக்கிய முடிவை வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, உச்சிப்பிள்ளையார் மண்டபத்திலிருந்து தீபம் எடுத்து வரப்பட்டு, இன்று மாலை 5 மணிக்கு மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தீபத்தூணைச் சுற்றி இரண்டடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா பகுதியும் மத்திய ரிசர்வ் காவல் படையின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
