LATEST NEWS
இது மனுஷனா இல்ல எந்திரமா..? சைக்கிள், டிவி முதல் முழு விமானம் வரை.. 9 டன் இரும்பைச் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த வினோத மனிதர்..!!
பிரான்ஸ் நாட்டில் 1950-ஆம் ஆண்டு பிறந்த மிச்சல் லோடிட்டோ, சிறுவயதில் சாதாரண உணவுகளையே சாப்பிட்டு வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் சாதாரண உணவின் மீதான ஈர்ப்பு குறைந்து, வீட்டிலிருந்த சிறிய இரும்புக் குண்டுகள் மற்றும் கம்பிகளைச் சாப்பிடத் தொடங்கினார்.
பின்னர் பெரிய அளவிலான இரும்பு, கண்ணாடி மற்றும் ரப்பர் பொருட்களைச் சிறிய துண்டுகளாக வெட்டி விழுங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார். இந்தக் கடினமான பொருட்கள் எளிதில் செரிமானமாவதற்காக மினரல் ஆயிலையும் அதிக அளவு தண்ணீரையும் பருகி வந்தார். இவரது குடல் மிகவும் கடினமாகவும், கூர்மையான உலோகப் பொருட்களைச் செரிமானம் செய்யும் தன்மையுடனும் இருந்ததால், இவருக்கு எந்தவொரு உடல்நலப் பாதிப்போ வயிற்றுக் கோளாறோ ஏற்படவில்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
மேடைப் பொழுதுபோக்குக் கலைஞராக இருந்த மிச்சல், 18 மிதிவண்டிகள், 7 தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் 1 கணினி உட்பட சுமார் 9 டன் இரும்புப் பொருட்களைச் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்தார். குறிப்பாக, 1978-ஆம் ஆண்டு ஒரு முழு ஜெட் விமானத்தை ஆயிரம் சிறிய துண்டுகளாக வெட்டிப் பொதுவெளியில் சாப்பிடத் தொடங்கிய இவர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சாப்பிட்டு 1980-ஆம் ஆண்டில் அந்த விமானத்தை முழுவதுமாகச் சாப்பிட்டு முடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தினார்.
