LATEST NEWS
“வாடகைக்கு வீடு கொடுத்ததே தப்பா போச்சே..” ஓனர் மகளையே காதலித்த இளைஞர் செய்த பகீர் காரியம்… சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த போலீஸ்.. பரபரப்பு பின்னணி..!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பீகார் இளைஞர் ஒருவர், வீட்டு உரிமையாளரின் மகளைக் காதலித்துத் தனது சொந்த ஊரான பீகாருக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்ற இளைஞர், அமிர்தசரஸில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அப்போது வீட்டு உரிமையாளரின் மகளுக்கும் கிருஷ்ண குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், வீட்டு உரிமையாளரின் மகள் திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, கிருஷ்ண குமார் தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாக அமிர்தசரஸ் சதார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய பஞ்சாப் காவல்துறையினர், தொழில்நுட்ப உதவியுடன் கிருஷ்ண குமாரின் இருப்பிடத்தைத் தீவிரமாகத் தேடி வந்தனர். விசாரணையில், அவர் பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தின் ஷம்புகஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பந்துதி கிராமத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பீகார் மாநிலக் காவல்துறையினரின் உதவியுடன் பந்துதி கிராமத்தில் அதிரடி சோதனை நடத்திய பஞ்சாப் போலீசார், அங்கு தங்கியிருந்த கிருஷ்ண குமாரையும் வீட்டு உரிமையாளரின் மகளையும் பத்திரமாக மீட்டனர். அமிர்தசரஸில் தொடங்கிய இந்தப் புகார் விசாரணை பீகார் வரை நீண்ட நிலையில், மீட்கப்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்ணை மேல் சட்ட நடவடிக்கைகளுக்காகப் பஞ்சாப் காவல்துறையினர் மீண்டும் அமிர்தசரஸுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
