“பாஜக கொண்டுவந்தால் உங்களின் மாற்றுத் திட்டம் என்ன..?” சமரசம் செய்ய வந்த தலைவர்களுக்குச் செக் வைத்த ஸ்டாலின்.. அனல் பறக்கும் விவாதம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாஜக கொண்டுவந்தால் உங்களின் மாற்றுத் திட்டம் என்ன..?” சமரசம் செய்ய வந்த தலைவர்களுக்குச் செக் வைத்த ஸ்டாலின்.. அனல் பறக்கும் விவாதம்..!!!

Published

on

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாகத் தன்னைச் சமரசம் செய்ய வந்த இண்டிய கூட்டணித் தலைவர்களிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிய முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்த முக்கியப் பேச்சுவார்த்தையின் போது, ஒருவேளை இந்தத் தொகுதி மறுவரையறை மசோதாவை மக்கள்தொகை அடிப்படையில் அடுத்த ஆண்டு பாஜக கொண்டுவந்தால், அதனை எதிர்கொள்வதற்கான உங்களின் மாற்றுத் திட்டம் என்ன என இண்டியா கூட்டணித் தலைவர்களிடம் மு.க. ஸ்டாலின் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாகக் குறையும் அபாயம் உள்ளதைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தற்போதைய மசோதாவின் மூலம் தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் 50 சதவீதத் தொகுதிகள் உயர்வு கிடைப்பதால் தாங்கள் இதற்கு ஆதரவளித்துள்ளதாகக் கூட்டணித் தலைவர்களிடம் விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தின் உரிமைகளையும் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பலத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இருப்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

மு.க. ஸ்டாலினின் இந்தத் திட்டவட்டமான கேள்வியும், தமிழ்நாட்டிற்கு 50% தொகுதிகள் உயர்வு கிடைக்கும் என்ற வாதமும் இண்டியா கூட்டணித் தலைவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் இந்த நிலைப்பாட்டிற்குப் பின்னால் உள்ள அரசியல் மற்றும் மாநில நலன் சார்ந்த காரணங்களைக் கேட்டறிந்த கூட்டணித் தலைவர்கள், அடுத்தகட்டமாக என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in